பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்....:தேனி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

முழுகவச உடை வழங்கல்
தேனி: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு 2 ஆயிரம் முழுக்கவச உடைகள் அடங்கிய கிட்டுகள் வழங்கப்பட்டன. இதற்கான மாதிரி பி.பி.இ., கிட்டை, யாரா பெர்ட்டிலைசர்ஸ் உர நிறுவன தலைவர் ராஜேந்திரன், நிர்வாக இயக்குனர் தர்மராஜ், நிபுணர் பிரசன்னா ஆகியோர் முதல்வர் இளங்கோவனிடம் வழங்கினர்.

ஆம்புலன்ஸ் வராததால் தவிப்பு

தேனி: கொடுவிலார்பட்டி மேற்குத்தெரு 45 வயது ஆணுக்கு ஜூலை 26ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தினர் 6 பேருடன் தனிமைப்படுத்த வசதி இல்லாத வீட்டில் நேற்று வரை தங்கியுள்ளார். ஒன்றிய கவுன்சிலரின் மகன் ராஜ்குமார் உணவு வாங்கிக் கொடுத்து ஆட்டோவில் தனியார் கல்லுாரி கோவிட் கேர் நல மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

கலெக்டர் ஆய்வு

தேவதானப்பட்டி: தனியார் கல்லுாரியில் கொரோனா வார்டில் 105 பேர் சிகிச்சையில் உள்ளனர். சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டு தானிய வகை உணவு வழங்கப்படுகிறது. இங்கு உணவு சரி இல்லை என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் கொரோனா வார்டு, உணவை தரத்தை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

கட்டுமான பணிக்கான பூமிபூஜை
போடி-: கழிவுநீர் கலப்புபெரியகுளம்: 12 வது வார்டு பகுதியில் வாரிவாய்க்கால் உள்ளது. கும்பக்கரை,கல்லாறு தண்ணீர் இதில் செல்கிறது. கீழவடகரை ஊராட்சி கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வாரி வாய்க்கால் நீரில் கலக்கிறது. கழிவுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை

தேவதானப்பட்டி: மேல்மங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி 42. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாங்கில் தொங்கினார். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X