தமிழ்நாடு

அவசியம்நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதில் மக்கள் ஒத்துழைப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

தேனி:கொரோனா பரவல் தடுக்க அதிக கூட்டம் சேரும் நிகழ்ச்சி, பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம். முக கவசம் இன்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் இன்னும் பலர் சமூக இடைவெளி பின்பற்றாமல் உள்ளனர். குறிப்பாக திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுகின்றனர்.

தேனி அல்லிநகரம்நகராட்சி 3 வது வார்டு பாலன் நகரை சேர்ந்த சிலர் அருகில் உள்ள கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் மொத்தமாக வீடு திரும்பினர். இவர்களின் 10 குடும்பத்தினரில் அடுத்த சில நாட்களில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒரே வார்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

சிலரின் அலட்சியத்தால் வீட்டில் இருந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிதான் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவல் அதிகரிக்கிறது.பாதிப்பு அதிகம் ஏன்தேனியில் இதுவரை 509 பேர் கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 256 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

நோயை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தினமும் 4 இடங்களில் நடத்துகின்றனர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வார்டு வாரியாக வீடுதோறும் காய்ச்சல் கண்டறியப்படுகிறது. எனவே அச்சமின்றி பரிசோதனை செய்தால்தான் விரைவில் நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதில் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X