கீழ்கட்டளை - -நாராயணபுரம் ஏரிக்கு இடையே, 17 கோடி ரூபாய் மதிப்பில், 4 கி.மீ., நீள போக்கு கால்வாயில், முதல் கட்ட சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.கீழ்கட்டளை ஏரி நிரம்பினால், அதன் உபரி நீர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் சேகரமாகும் வகையில், 4 கி.மீ., நீளம், 80 மீட்டர் அகலத்தில், போக்கு கால்வாய் உள்ளது.தென்சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் வரத்து, போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டன.கீழ்கட்டளை- - நாராயணபுரம் இடையேயான போக்கு கால்வாயும், பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து, நம் நாளிதழ் தொடர் செய்திகளை வெளியிட்டது.அதன் பலனாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, போக்கு கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை, 80 சதவீதம் வரை அகற்றினர்.இதில், பல பிரமாண்ட கட்டடங்கள் இடித்து, தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்நிலையில், போக்கு கால்வாயின் இருபுறமும் மீண்டும், ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில், மதில் சுவர் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, முதல் கட்டமாக, 1.௮ கி.மீ.,க்கு, போக்கு கால்வாயின் இருபுறமும், ௧௪ அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பி, சீரமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இதற்காக, 1௭ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஊரடங்கு காரணமாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தளர்வுகள் கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.அடுத்த ஓராண்டிற்குள், முதல் கட்ட சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று விடும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - -நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE