சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றவர் குத்திக் கொலை இனியும் துாங்கக் கூடாது அரசு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணியில், ஆதரவற்றவர்குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவல்லிக்கேணியில், நடைபாதையில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன், 47; மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று காலை, வாலாஜா சாலை பஸ் நிறுத்தம் அருகே, 49 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர் ஒருவர், சாலையோரம், பிளாஸ்டிக் பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.அப்போது, ஜெயச்சந்திரன், அவரிடம் வீண் தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.இதில், மயங்கிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.'சென்னையில், பல இடங்களில், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி சுற்றி திரிகின்றனர். அவர்களால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நம் நாளிதழில், படத்துடன், அவ்வப்போது சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.'ஊரடங்கு காலத்தில், இவர்களை கண்டறிவது எளிது; ஆவண செய்யுங்கள்' என்ற கோரிக்கை வைத்தும் பலனின்றி, தற்போது உயிர் பலி ஏற்படும் அளவுக்கு, விவகாரம் சென்றுள்ளது. அரசு, இனியும் துாங்குவதில் நியாயம் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X