சாலையோரம் கிடந்த ஆண் குழந்தை சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை, :சென்னை, முத்தியால்பேட்டையில், சாலையோரம் மீட்கப்பட்ட குழந்தைக்கு, மருத்துவ சிகிச்சை அளித்த பின், தொடர்ந்து பராமரிக்க, சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சென்னை, பாரிமுனை, முத்தியால்பேட்டை, அம்மன் கோவில் தெருவில், கடந்த, 14 காலை, முத்தியால்பேட்டை போலீசார், பிறந்து, இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.குழந்தை, 1.6 கிலோ கிராம் எடையுடன் இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. சாலையில் கிடந்ததால், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, தடுப்பூசி போடப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை தாய்பால் வங்கியில், தாய்ப்பால் பெற்று, குழந்தைக்கு வழங்கப்பட்டது. தற்போது, குழந்தை நோய் தொற்று குணமடைந்து, எடை சீராகவும், உடல் ஆரோக்கியமாகவும் உள்ளது.இக்குழந்தையை, தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத் துறை அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தார்.அமைச்சர் சரோஜா கூறியதாவது:தமிழகத்தில், 1,200 குழந்தை நல மையங்கள் உள்ளன. இதில், 152 மையங்கள், அரசு உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்படுகின்றன. மேலும், 1,100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன. ஒரு குழந்தைக்கு, மாதம், 2,160 ரூபாய் செலவுக்காக கொடுக்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு, 42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தேவையான தாய்பால் வழங்க, அரசு சார்பில் அமைக்கப்பட்ட தாய்பால் வங்கி, பெரும் பயனாக அமைந்துள்ளது. வரும் காலங்களில், அனைத்து மாவட்டங்களிலும், தாய்பால் வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X