குப்பை வண்டியில் செல்லும் உணவு திருவொற்றியூரில் தான் இந்த கொடுமை

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 குப்பை வண்டியில் செல்லும் உணவு திருவொற்றியூரில் தான் இந்த கொடுமை

திருவொற்றியூர், : திருவொற்றியூரில், களப்பணி ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு எடுத்துச் செல்லப்படும் அவலம் தொடர்கிறது.திருவொற்றியூர் மண்டலத்தில், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும், துாய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் களப் பணியாளர்கள் என, 2,500க்கும் மேற்பட்டோர், மண்டலம் முழுதும், பம்பரமாய், சுழன்றடித்து வேலை பார்க்கின்றனர்.இவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், காலடிப்பேட்டை, தனியார் மண்டபத்தில் உணவு தயாரித்து, வார்டுகள் தோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த உணவு பொட்டலங்களை, சுகாதாரமற்ற குப்பை வண்டியில் ஏற்றிச் செல்வதாக, புகார் எழுந்துள்ளது.காலையில், குப்பை சேகரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களில், மதியம் உணவு பொட்டலங்கள் கொண்டு சென்று, வார்டுகள்தோறும், களப்பணி மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.ஏற்கனவே, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில், புழு இருந்ததால், பெரும் சர்ச்சை கிளம்பியது.தற்போது, களப்பணி ஊழியர்கள் மற்றும், துாய்மை பணியாளர்களுக்கு, வினியோகிக்கப்படும் உணவு பொட்டலங்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதிகாரிகள், உயர்தர ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிடும் நிலையில், ஊழியர்களுக்கு வழங்கும் உணவில், குறைந்தபட்ச சுகாதாரத்தையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202020:19:22 IST Report Abuse
ருத்ரா கொரோனாவை மட்டும் அல்ல பலதரப்பட்ட வியாதிகளை அழைக்கிறார்கள். அரசோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமே மனிதனுக்கு ஆதாரம்.
Rate this:
Cancel
29-ஜூலை-202019:37:44 IST Report Abuse
ஆப்பு வயிறார சாப்புடுங்கோ... நதி மூலம், ரிஷி மூலம் பாக்கக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X