சென்னை, ;'ஜாய் ஆலுக்காஸ்' ஜுவல்லரியில், வாடிக்கையாளர்கள் விற்கும் நகைகளுக்கு, அதிகபட்ச மதிப்பு வழங்கப்பட உள்ளது.பிரபல முன்னணி, தங்க நகை விற்பனை நிறுவனமான, 'ஜாய் ஆலுக்காஸ்' கொரோனா நெருக்கடியில் மக்களுக்கு உதவ, தங்க நகைகளுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்க முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, தங்கத்தின் விலை உயர்ந்து வரும் இச்சூழலில், வாடிக்கையாளர்கள் விற்கும் தங்க நகைகளுக்கு, அவர்கள் அதிகபட்ச விலையை பெறலாம்.வாடிக்கையாளர்கள், எந்த கடைகளில், நகைகளை வாங்கி இருந்தாலும், அதை, ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரி, சந்தை மதிப்பின் அதிகபட்ச விலைக்கே வாங்கிக் கொள்கிறது.மேலும், பழைய தங்க நகைகளை, புதிய டிசைனில், 'பிராண்டு நியூ' நகைகளாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.அதேபோல், பழைய நகைகளை விற்று பணம் பெறும் போது, வாடிக்கையாளர்கள், கே.ஓய்.சி., மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., வழிமுறைகளை பூர்த்தி செய்து, உடனடியாக ஒளிவு மறைவின்றி, பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.www.joyalukkas.com என்ற இணையதளத்தில், 'ஆன்-லைன்' வழியாகவே, வாடிக்கையாளர்கள் நகைகளை தேர்வு செய்வதுடன், விரும்பும் நகைகளுக்கான விலையின், குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்தி, முன்பதிவு செய்யலாம்.நகைகளை வாங்கும் போது, முன்பதிவு செய்த நாளின் விலை அல்லது வாங்கும் நாளின் விலை, இந்த இரண்டில், எது குறைவாக உள்ளதோ, அந்த தொகையை செலுத்தி பெறலாம்.கொரோனா பாதிப்பு காரணமாக, தொடர்பில்லா முறையில், 'பில்லிங்' செய்யும் வசதியும், அனைத்து ஜாய் ஆலுக்காஸ் ஷோரூம்களில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.