சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி வரவேற்பு வனிதா மீது வழக்கு பதிவு

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

போரூர், :ஊரடங்கு காலத்தில், உரிய அனுமதி இல்லாமலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதாக, நடிகை வனிதா மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகை வனிதா, ஜூன், 27ல், பீட்டர் பால் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன் வீட்டில், நடிகை வனிதா, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இவர், ஊரடங்கு காலத்தில், எந்தவித அனுமதியும் பெறாமல், அதிக ஆட்களை குடியிருப்பில் திரட்டியதுடன், முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல், புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து, முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய வனிதா மீது, அடுக்கு மாடி குடியிருப்பின் பொதுச்செயலர் நிஷா தோட்டா என்பவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வனிதா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202006:30:25 IST Report Abuse
Vanitha Veriyan Ini nisha thota vai patri pala unmaigal veliyea varum.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X