தடுப்பூசி காப்பாற்றுமா: டிரம்ப் நம்பிக்கை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Donald Trump, Donald Trump vaccine, coronavirus vaccine, coronavirus, covid 19, coronavirus outbreak


வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க,100 நாட்களே உள்ள நிலையில், 'கொரோனா' வைரசால் இழந்த செல்வாக்கை, தடுப்பூசி தயாரிப்பு மூலம் மீட்டெடுப்பதில், அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்நிலையில், அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.


latest tamil news




உலக அளவில், அதிக பாதிப்பு மற்றும் அதிக பலியில், அமெரிக்கா தொடர்ந்து பல நாட்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு, 42 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 1.46 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தவில்லை என்ற விமர்சனம், டிரம்ப் நிர்வாகத்தின் மீது உள்ளது.

செல்வாக்கு சரிவுஅத்துடன், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதும், அவருக்கு எதிராகவே அமைந்தது. இதனால், மக்களிடம் இருந்த, டிரம்பின் செல்வாக்கு கடுமையாக சரியத் துவங்கியது.தற்போதைய நிலையில், டிரம்பைவிட, ஜோ பிடனின் செல்வாக்கு மளமளவென உயர்ந்து வருகிறது. பல்வேறு கருத்துக் கணிப்புகள் இதை உறுதி செய்கின்றன.இதையடுத்து, கொரோனா வைரசால் இழந்த செல்வாக்கை, அதற்கான தடுப்பூசியை விரைந்து அறிமுகம் செய்வதன் மூலம் மீட்டெடுக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பில் டிரம்ப் உள்ளார். தடுப்பூசியை உருவாக்கும் முயற்சி அமெரிக்காவில் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது.

மனிதர்களுக்கு மருந்துகளை அளித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அதிபர் தேர்தலுக்கு முன்பாக, இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு கிடைக்குமா, சரிந்த செல்வாக்கு உயருமா என்பதே, டிரம்ப் குழுவின் எதிர்பார்ப்பாக உள்ளது. நேரடியாக ஆய்வுஅதற்கேற்ப, தடுப்பூசி தயாரிப்பது தொடர்பான பரிசோதனைகள் முன்னேற்றம் குறித்து, அதிபர் டிரம்பும், துணை அதிபர், மைக் பென்சும் நேரடியாக ஆய்வு செய்தனர்.வடக்கு கரோலினாவில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை, டிரம்ப் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அதே நேரத்தில், மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்தார்.'தேர்தலுக்கு முன்பாக, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால், நிச்சயம் அது டிரம்பின் செல்வாக்கை, அவர் மீதான நம்பிக்கையை மக்களிடம் உயர்த்தும். 'அதனாலேயே, பரிசோதனை மையத்துக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்' என, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.'தடுப்பூசி மீது மிகுந்த நம்பிக்கையுடன் டிரம்ப் உள்ளார். அதே நேரத்தில், வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. 'தடுப்பூசி வந்தாலும், இழந்த செல்வாக்கை அவரால் மீட்க முடியாது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.அமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியை, கொரோனா வைரஸ் பாதிப்பும், தடுப்பூசியும் நிர்ணயிக்க உள்ளன என்பது மட்டும் நிச்சயம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
29-ஜூலை-202010:03:34 IST Report Abuse
S. Narayanan மக்களுக்கு தடுப்பூசி உடனே தேவை.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஜூலை-202006:05:45 IST Report Abuse
 Muruga Vel தடுப்பூசி அனுமதிப்பதில் ராஷ்டிரபதிக்கு அதிகாரம் இல்லை ... பிரசாந்த் கிஷோர் இப்போ வேலையில்லாம இருக்கார் ...அப்படியே வைக்கோவை எதிர் அணிக்கு ஒருங்கிணைப்பாளரா நியமிச்சுடுங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X