பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவு நாள்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பழநி,:பழநியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது. தலைமைஆசிரியர் பாலசுப்பிரணியம், தேசிய ஆசிரியர் சங்க மாநில மகளிர் அணிச் செயலாளர் சாருமதிதேவி, கல்வி மாவட்டச் செயலாளர் ராஜபாண்டியன் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி தலைவர் வினோத்குமார் அஞ்சலி செலுத்தினர். வேடசந்துார் ஒன்றிய பா.ஜ., சார்பில், இளைஞர் அணி துணைத்தலைவர் கார்த்தி, பொது செயலாளர் சதாசிவம், செயலாளர் மாவீரன், நிர்வாகி சுரேஷ் அஞ்சலி செலுத்தினர்.

சாணார்பட்டி அக்னிச் சிறகுகள் சமூகசேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சார்பில் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிறுவனர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஆசிரியர் சமையன் பாண்டியன் முன்னிலை வகித்தார். மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுந்தரம், ஆய்வாளர் முனியப்பன் பேசினர். மாணவர் ஜாங்கீர் மீரான் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X