பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ஆப்பாட்டம்

பழநி: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா காலத்தில் நிதிநிறுவனங்கள் நுண் கடன் வசூலை நிறுத்தி வைத்தல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தாலுகா அலுவலக வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் முருகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



வாலிபர் கைது

வேடசந்துார்: அரசு டெப்போ முன்பு குடியிருப்பவர் முத்துராஜ் 35. இவர் இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். வாகனம் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் சேடபட்டி பிரபு என்ற பரத் 23, திருடியது தெரிந்தது. போலீசார் பரத்தை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


சேதமான மின்கம்பம்

வேடசந்துார்: திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில், வேடசந்துார் பிரிவுஅருகே உயர் மின் கோபுர விளக்கு சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளன. இங்கு புதிய மின்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொட்டி அமைக்க எதிர்ப்பு

நெய்க்காரப்பட்டி: பாப்பம்பட்டி ஊராட்சி குதிரையாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதில் சிக்கல் இருந்தது. இதனால் குப்பம்பாளையத்தில் புதிய கீழ்நிலைத்தொட்டி அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. தொட்டி அமையும் இடம், கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் பகுதி. அதனால் குடிநீர் மாசடையும். எனவே அங்கு தொட்டி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சு

காதாரக்கேடு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் - வேடசந்துார் செல்லும் ரோட்டில் காளாஞ்சிபட்டி அருகே ரோட்டோரம் இரவில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இப்பகுதியில் தனியார் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளன. கழிவில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

பாலம் பணியில் தொய்வு

கொடைக்கானல்: அப்சர்வேட்டரி பகுதியில் மழைக் காலங்களில் உருவாகும் ஊற்றுக்களால் ரோடு சேதமடைந்து வந்தன. நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் வழிந்தோட குழாய் பாலம் அமைத்தனர். தற்போது பல இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடந்தாலும், ஊரடங்கால் பணியில் தொய்வு உள்ளது. இவ்வழியே செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. பாலம் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னழுத்த பிரச்னை

வடமதுரை: புதுகலராம்பட்டி பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் ஆதாரங்கள், விவசாய கிணறுகளுக்கு செங்குறிச்சியில் இருந்து மின்சப்ளை வந்தது. இங்கிருந்து 2 மாதங்களுக்கு முன் தாமரைப்பாடி மின் நிலையத்திற்கு இணைப்புகள் மாற்றப்பட்டன. அன்றுமுதல் இப்பகுதியில் முழுமையான மின்னழுத்தம் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் மின் மோட்டார்களை இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. மின் அழுத்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X