பழநியில் பகலில் எரியும் இரவில் எரியாத விளக்குகள்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

பழநி:பழநி அண்ணாநகர் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிப்பதில் அலட்சியம் காரணமாக இரவில் எரியாமலும், தாராபுரம் ரோட்டில் பகலில் வீணாக ஒளிர்வதுமாக உள்ளது.

அண்ணாநகரில் உள்ள அனைத்து ரோடுகளிலும் ஒருமாதமாக இரவில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததே காரணம் என புகார் எழுந்துள்ளது. அதேசமயம் தாராபுரம் ரோட்டில் சிலநாட்களாக பகல் முழுவதும் தொடர்ந்து தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

இதுகுறித்தும் பொதுமக்கள் புகார் அளித்தும், யாரும் கண்டுகொள்ளாததுதான் வேதனை. மின்விளக்குகளை உடனே சரிசெய்வதுடன், கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X