ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மதுரை:ஒட்டன்சத்திரம் கரிசல் தோட்டம் ராஜசேகரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு நாகனாம்பட்டியில் வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை மார்க்கெட் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள வியாபாரிகளுக்கு சிலர் தவறான வாக்குறுதி அளித்து, தங்கச்சியம்மாள்பட்டி தனியார் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.நாகனாம்பட்டி மார்க்கெட் செயல்படாவிடில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அம்மார்க்கெட் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாபாரிகளை தங்கச்சியம்மாள்பட்டிக்கு இடம்பெயருமாறு வற்புறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: திண்டுக்கல் கலெக்டர், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் அனைத்துத் தரப்பிற்கும் நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X