தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மதுரை, :'மதுரை பூம்புகார் பித்தளை பொருட்கள் உற்பத்தி நிலைய தொழிலாளர்களுக்கு மே, ஜூன் மாத சம்பளம் வழங்க வேண்டும்,' என, ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.நிர்வாகி அமர்நாத் தலைமையில் தொழிலாளர்கள் கலெக்டர் வினய்யிடம் வழங்கிய மனு: கொரோனா ஊரடங்கில் இத்தொழிலாளர்களுக்கு ஏப்., ரூ.2500, ஜூலையில் ரூ.5000 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. மே, ஜூனுக்கு வழங்கப்படவில்லை. இவர்கள் பீஸ் ரேட் அடிப்படையில் மாதம் ரூ.22 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வந்தனர். மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியும் ஊரடங்கில் முழு சம்பளம் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X