பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:ஊரடங்கால் விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச, தேசிய போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் வயது 15-50க்கு மேல் உள்ள வீரர்கள் பயிற்சி பெற அரசு அனுமதித்துள்ளது. வீரர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய உபகரணங்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. மேலும் கட்டாயம் 'ஆரோக்கிய சேது' செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் திறக்க அனுமதியில்லை. பயிற்சி மேற்கொள்ள வீரர்கள் மாவட்ட விளையாட்டுஅரங்குகளில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X