தடைசெய்யப்பட்ட பாலிதீன் தாராளம்| Dinamalar

தடைசெய்யப்பட்ட பாலிதீன் தாராளம்

Added : ஜூலை 29, 2020
Share
திருப்பரங்குன்றம்,:சுற்றுச்சூழல் மற்றும் பூமிக்கு கெடு விளைவிக்கும் மக்காத பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ரோடு ஓரங்கள், கழிவுநீர் கால்வாய்கள், கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும்

திருப்பரங்குன்றம்,:சுற்றுச்சூழல் மற்றும் பூமிக்கு கெடு விளைவிக்கும் மக்காத பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ரோடு ஓரங்கள், கழிவுநீர் கால்வாய்கள், கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் கால்வாய்களில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளன.கொரோனா பாதிப்பால், மாநகராட்சி அலுவலர்கள் சுகாதாரப் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்டு கொள்ளவில்லை. அப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X