பழங்கால பொருட்களை மீட்ட அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழங்கால பொருட்களை மீட்ட அதிகாரிகள்

Added : ஜூலை 29, 2020
Share
பேரையூர்,:பேரையூர் அருகே பழங்கால இரும்பு உலை இருந்ததற்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சூலப்புரம் மலையடிவாரப் பகுதியில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், விதவிதமான குடுவைகள் கிடைத்துள்ளன. 5 ஆம் நுாற்றாண்டு இரும்பு உலை பொருட்கள் கண்டறியப்பட்டன என தொல்லியல் துறை

பேரையூர்,:
பேரையூர் அருகே பழங்கால இரும்பு உலை இருந்ததற்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சூலப்புரம் மலையடிவாரப் பகுதியில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், விதவிதமான குடுவைகள் கிடைத்துள்ளன. 5 ஆம் நுாற்றாண்டு இரும்பு உலை பொருட்கள் கண்டறியப்பட்டன என தொல்லியல் துறை அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். இந்நிலையில் இப்பகுதியில் விவசாயம் செய்ய நிலத்தை பண்படுத்தும் போது முதுமக்கள் தாழிகளில் கிடைத்த பல்வேறு வடிவிலான பானைகள், மீன் வடிவிலான சின்னங்கள், வளையல்கள், எலும்பு குவியல்கள், பாசி வகைகளை விவசாயி ஒருவர் கண்டறிந்தார். அதிகாரிகள் பொருட்களை மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X