சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டை கண்டித்து மறியல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

அய்யலுார்:வடமதுரை ஒன்றியத்தில் வறட்டாறு, ஓடைகளில் மணல் திருட்டு கன ஜோராக நடக்கிறது.

ஒட்டன்சத்திரம் பகுதி கனிம வளத்துறையின் அனுமதி சீட்டை கொண்டு இப்பகுதியில் முறைகேடாக மணல் எடுக்கின்றனர்.இவர்களுக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அரசு துறைகளின் ஆதரவு இருப்பதால் யார் புகார் செய்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை.இவர்களுக்கு போட்டியாக உள்ளூர் வாசிகளும் மணல் எடுக்கின்றனர்.

இவர்களுக்குள் மோதல், சண்டை நடக்கிறது. சில இடங்களில் சமரசம் செய்து இருதரப்பும் மணல் அள்ளுகிறது. புத்துார் முடிமலை வறட்டாற்றில் மணல் திருட்டு குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், வைரபிள்ளைபட்டி மக்கள் நேற்று ரோடு மறியல் செய்தனர்.அய்யலுார் - புத்துார் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X