தமிழ்நாடு

வாகனங்களின் போட்டோக்களைபதிவு செய்தால் மட்டும் 'எப்.சி.,' மதுரையிலும் நடைமுறைக்கு வந்தது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement


மதுரை, - மதுரையில் அனைத்து வட்டார போக்குவரத்து மற்றும் பகுதி (யூனிட்) அலுவலகங்களில் 'எம் -வாகன்' செயலி மூலம் மட்டுமே வாகனங்களுக்கு தகுதி சான்று (எப்.சி.,) வழங்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. கார், பஸ் உட்பட வாகனங்களை இயக்க எப்.சி., பெற வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களுக்கு வாகனங்களை எடுத்து சென்று அது இயங்குவதாக உள்ளதா என சோதித்த வாகன ஆய்வாளர்கள் 'எப்.சி.,' வழங்குவர். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்க வேண்டும். வாகனங்களை நேரடியாக எடுத்து செல்லாமல் 'எப்.சி.,' பெறுவதாக புகார் எழுந்தது. இதை தவிர்க்க 'எம்-வாகன்' என்ற எப்.சி., செயலி அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி வாகனத்தின் முன், பின், இடது வலது பக்கங்கள் என மொத்தம் 5 போட்டோக்கள் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் வாகனத்தை இயக்கி, ஆவணங்களை சரிபார்த்த இரு நாட்களுக்கு பின் எப்.சி., வழங்கப்படும். வாகன ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "வாகனங்களை நேரடி யாக பார்க்காமல் இனி 'எப்.சி.,' வழங்க முடியாது. முறைகேடு தவிர்க்கப்படும்," என்றார்.இந்நிகழ்ச்சிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்ணன் (வடக்கு), பிரபு (மத்திய), செந்தில்குமார் (தெற்கு), சரவணக்குமார் (மேலுார்), அனிதா (வாடிப்பட்டி), மாணிக்கம் (திருமங்கலம், உசிலம்பட்டி) பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X