தமிழ்நாடு

கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement



இம்மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து 2012 முதல் கிரானைட் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பயன்பாட்டிற்காக கல், ஜல்லி வெட்டி எடுக்க கல் குவாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு 41 குவாரிகள் ஏலம் விடப்பட்டதில் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச தொகை அதிகம் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து ஏலம் எடுக்க மறுத்து விட்டனர். ஒன்றிரண்டு குவாரிகள் மட்டும் ஏலம் போயின.30க்கும் மேற்பட்ட குவாரிகள் ஏலம் போகாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் வினய், கனிமவளத்துறை இணை இயக்குனர் ஆறுமுகநயினார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆய்வு நடத்தினார்.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: குறைந்த பட்ச தொகையை மாற்றி அமைப்பது குறித்து உயரதிகாரிகளிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதியளித்ததும் அந்த தொகையை நிர்ணயித்து குவாரிகள் ஏலம் விடப்படும். மகளிர் சுய உதவி குழுவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏலம் விடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X