கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊரில் பணி விருப்பமா அரசு இயந்திரம் இயங்காது: உயர்நீதிமன்றம் அறிவுரை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மதுரை: 'ஒவ்வொரு அரசு ஊழியரும் சொந்த ஊரில் பணி செய்ய அனுமதிக்கக் கோரும்பட்சத்தில், அரசு இயந்திரம் செயல் படாது,'என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் வாசு. அதே கிராம உதவியாளராக பணிபுரிந்தார். ஒழுங்கு நடவடிக்கையால் ஓடைகலுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அங்கு ஒரு சமூகத்தினரின் அச்சுறுத்தல் உள்ளதால், ராதானுாருக்கு இடமாறுதல் செய்ய ராமநாதபுரம் கலெக்டருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வாசு மனு செய்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்: அச்சுறுத்தல் உள்ளதாக கூறுவதற்கு புகார் அளித்ததற்கான ஆதாரத்தை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை. ஒவ்வொரு அரசு ஊழியரும் சொந்த ஊரில் பணி செய்ய அனுமதிக்கக் கோரும்பட்சத்தில், அரசு இயந்திரம் செயல்படாது.அரசின் பல்வேறுதுறை ஊழியர்களுக்கு (நான் உட்பட) கவுரவமான சம்பளம் மற்றும் இதரப் பலன்களை சரியான நேரத்திற்கு அரசு வழங்குகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வித சிரமமும் இன்றி அரசு ஊழியர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். தினக்கூலிகள், வணிகர்கள், தொழில்துறையினர் மிக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிகள் வழங்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு ஒரு காசு கூட சம்பளக்குறைப்பு செய்யப்படவில்லை.அரசு ஊழியர் தனது பொறுப்பை உணர்ந்து, சமூக மேம்பாட்டுப் பணியில் முன்னணியில் நிற்க வேண்டும்.

சொந்த குடும்பத்தை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X