, ''வைக்கோல், கலப்புத் தீவனங்களுக்கான செலவு வெகுவாக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு நீடிப்பதால், வைக்கோல் தட்டுப்பாடு, பால் கொள்முதல் விலை குறைப்பு
பிரச்னைகளால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
போதிய மழையின்றி, விவசாயம், கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில்கள் பாதித்துள்ளன. அம்மையநாயக்கனுார், செம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் கூட்டுறவு சங்கங்களில் சில மாதங்களுக்கு முன் கறவை மாடு கடன் பெற்றிருந்தனர். போதிய மழையின்றி வளர்ப்புக்கான செலவின அதிகரிப்பால் தற்போது தவிக்கின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தினர் கடன் வசூலுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கூலி வேலைகூட இல்லாத நிலையில், கால்நடை வளர்ப்பு செலவினமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் அரசு உத்தரவை மீறி வசூல் நடவடிக்கை துவங்கியுள்ளதால் கால்நடை வளர்ப்போர் அதிருப்தியில் உள்ளனர்.
விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''வைக்கோல், கலப்புத் தீவனங்களுக்கான செலவு வெகுவாக அதிகரித்துள்ளது. ஊரடங்கு நீடிப்பதால், வைக்கோல் தட்டுப்பாடு, பால் கொள்முதல் விலை குறைப்பு பிரச்னைகள் உள்ளன. கடன் வசூலுக்கு அரசு அவகாசம் அளித்தும், கூட்டுறவு சங்கத்தினரின் வசூல் முயற்சி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE