போலீஸ் செய்தி

Added : ஜூலை 29, 2020
Advertisement
சிறுவன், சிறுமிக்கு செக்ஸ் தொல்லை மதுரை: வில்லாபுரம் பாலசுப்பிரமணி. டீ வியாபாரி. 6 வயது சிறுமி, 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். போக்சோ சட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.நகைபறிப்புமதுரை: யாகப்பா நகர் சுலோக்சனா 49. நேற்று பகல் 12:00 மணிக்கு மகளுடன் டூவீலரில் அண்ணாநகர் அம்பிகா கல்லுாரி அருகே வந்தபோது, டூவீலரில் வந்த இருவரில்

சிறுவன், சிறுமிக்கு செக்ஸ் தொல்லை

மதுரை: வில்லாபுரம் பாலசுப்பிரமணி. டீ வியாபாரி. 6 வயது சிறுமி, 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். போக்சோ சட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நகைபறிப்பு
மதுரை: யாகப்பா நகர் சுலோக்சனா 49. நேற்று பகல் 12:00 மணிக்கு மகளுடன் டூவீலரில் அண்ணாநகர் அம்பிகா கல்லுாரி அருகே வந்தபோது, டூவீலரில் வந்த இருவரில் ஒருவர் 9 பவுன் நகையை பறித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் மீது தாக்குதல்

மதுரை: அழகர்கோவில் ரோடு - மூன்றுமாவடி சந்திப்பில் எஸ்.ஐ., அய்யனார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டையர்கள் விநாயகம், வேலவன் 28, ஆகியோர் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்து கீழை தள்ளிவிட்டனர். விசாரணையில் அவர்கள் கப்பற்படையில் பணிபுரிபவர்கள் எனத்தெரிந்தது. கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

மருமகன் தாக்கி மாமியார் பலியா

உசிலம்பட்டி: அன்னம்பாரிபட்டி முத்துலட்சுமி 50. இவரது மகள் பிரியதர்ஷினி 22. இவர் காதல் கணவர் கூத்தியார்குண்டு பிரசாந்த்குமார் 25, மாமியார் பெயரில் உள்ள சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் தாக்கினார். சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமி நேற்று இறந்தார்.இருவர் கைதுமேலுார்: வெங்கடேஷ் நகரில் துண்டு சீட்டில் லாட்டரி விற்ற ராசு 67, டி.தாமரைப்பட்டியில் மதுவிற்ற மூர்த்தியை 39, போலீசார் கைது செய்து 10 துண்டு சீட்டுக்கள் மற்றும் 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.போக்சோவில் பீகார் வாலிபர் கைதுதிருமங்கலம் : பீகார் மாநிலம் சமதிபூர் சங்கர் மகன் அமர்சித் 27, திருமங்கலம் விருசங்குளம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கள்ளிக்குடி உலகாணியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்தார். இருவரும் பழகினர். சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜூலை 25 அமர்சித் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். அமர்சித்தை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.பணி செய்ய விடாமல் தடுப்புகள்ளிக்குடி : வேளாண் உதவி இயக்குனர் உலகம்மாள், நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது பொட்டல்பட்டி சத்துணவு ஊழியர் கோவிந்தராஜ், நண்பர் முத்துகிருஷ்ணன் அலுவலகத்திற்குள் நுழைந்து டிராக்டரை யாருக்கு ஏலம் விட்டீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பணி செய்ய விடாமல் தீர்மான புத்தகத்தை எடுத்து சென்றனர். இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அரிவாள் வெட்டு: கணவன், மனைவி கைதுமேலுார் : வண்ணாம்பாறைபட்டி நந்திஷ்குமார் 29 மற்றும் பாண்டி 60. இருவருக்கும் பாதை பிரச்னை தொடர்பான விரோதம் இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் பாண்டி அரிவாளால் நந்திஷ்குமார் மற்றும் உறவினர்கள் மூவரை வெட்டினார். காயமுற்றவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பாண்டி, அவரது மனைவி அமிர்தம் 50, ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடுகின்றனர்.கொலையானவர் மீது வழக்குமதுரை: சிலைமான் புளியங்குளம் ரவுடி தவமணி 27. ஜூலை 26 ல் பூமிநாதனின் 17 வயது மகனுக்கு மது வாங்கி கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீடு தேடிச் சென்று தவமணி தாக்கினார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டார். பூமிநாதன் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பூமிநாதன் தரப்பு புகாரின் பேரில் இறந்த தவமணி மற்றும் சக்தி மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முதியவரிடம் ரூ.5 லட்சம் மோசடிமதுரை: குலமங்கலம் ராமலிங்கம் 60. ஓய்வூதியரான இவரிடம் நெல்லை லட்சுமி, கணவர் தினகரன் ஆகியோர் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்யுமாறு கூறினர். ராமலிங்கமும் ரூ.5 லட்சம் கொடுத்தார். அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டவர், வங்கிக்கு சென்று அதை காண்பித்த போது போலியானது எனத்தெரிந்தது. ஏற்கனவே கஸ்டம்ஸ் அதிகாரியிடம் இதேபோல் லட்சுமி ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.245 மதுபாட்டில்கள் பறிமுதல்மதுரை; மாவட்டத்தில் தடையை மீறி மதுபாட்டில்கள் விற்றதாக நேற்றுமுன்தினம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். 245 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருமங்கலம் : குதிரைசாரிகுளம் பிரிவில் எஸ்.ஐ., முருகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது மதுபாட்டில் விற்ற கண்ணபிரானை கைது செய்தனர். 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகைக்குளத்தில் அறிவழகன் 45, வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்றார். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.டூவீலரில் சென்றவர் இறப்புபேரையூர் : தென்காசி ஹவுசிங் போர்டு மணி 55. இவரும் இவரது மகனும் டூவீலரில் (ஹெல்மெட் அணிந்து இருந்தனர்) மதுரைக்கு சென்று விட்டு தென்காசிக்கு திரும்பினர். பேரையூர் அருகே காவெட்டு நாயக்கன்பட்டி விலக்கில் மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு டூவீலரிலிருந்து மயங்கி கிழே விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றில் விழுந்த பசு மீட்புஉசிலம்பட்டி : செல்லம்பட்டி விவசாயி முருகன். இவரது தோட்டத்தில் மேய்ந்த பசுமாடு 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. தீயணைப்பு துறையினர் சென்று அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.தீயில் பொருட்கள் நாசம்உசிலம்பட்டி: மலையாண்டி தியேட்டர் தெரு பழவியாபாரி செல்வம் 50. மனைவியுடன் காலையில் கடைக்கு சென்று விட்டார். பழங்கள் வைக்கப்படும் அட்டை பெட்டிகளில் தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் வந்து அணைப்பதற்குள் பொருட்கள் நாசமாயின.2 கிலோ கஞ்சாவுடன் பெண் கைதுஉசிலம்பட்டி: தாலுகா போலீசார் கீரிப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது காசம்மாள் 48, வீட்டில் பதுக்கியிருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவரை கைது செய்தனர்.கொத்தனார் பலிமேலுார்: சூரக்குண்டு விலக்கில் தனியார் குடோனில் சின்னஒக்கப்பட்டி மாரி 48, கொத்தனாராக இருந்தார். நேற்று வேலைபார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X