பொது செய்தி

இந்தியா

5 ரபேல் விமானங்கள் இன்று வருகை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Rafale jets, Rafale, Ambala air base, india, air force

அம்பாலா :ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் இன்று வருவதை அடுத்து, ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளம் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம் புறப்பட்டன. இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள,


latest tamil news




அம்பாலா விமானப்படை தளத்துக்கு, இன்று இரவு வந்தடைகின்றன. இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ' எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.அம்பாலா மக்கள், இன்று இரவு, 7:00 முதல், 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ., -- எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.--

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
29-ஜூலை-202013:40:34 IST Report Abuse
வல்வில் ஓரி டெடிகேடட் டு தென் மினிஸ்டர் மனோகர் பாரிக்கர்..🙏🙏🙏
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-ஜூலை-202013:17:14 IST Report Abuse
Anand //கொஞ்சமாவது இந்தியாவிற்கு விசுவாசத்தை காட்டுங்க// கண்டிப்பாக முடியவே முடியாது, அப்படி காட்டினால் சீனாக்காரன் தேரை அவிழ்த்து தெருவில் விட்டுவிடுவான், வாங்கி தின்றதற்கு கைமாறு செய்தே ஆகவேண்டும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
29-ஜூலை-202012:22:50 IST Report Abuse
sahayadhas வாங்கினார், வாங்குகிறார், இன்னமும் வாங்குவார்.
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
29-ஜூலை-202022:12:17 IST Report Abuse
வல்வில் ஓரிஅப்டியே ஆமென் சொல்லி முடி..அழகா இருக்கும்ல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X