ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பு விற்பனையாளர்கள் பற்றாக்குறையா?

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

வடலுார்; கடலுார் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசு சார்பில், வீடு ,வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வடலுார் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் தாமதமாக திறக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதனால் கடைகள், அலுவலகங்கள் மற்றும் விவசாய வேலைகளுக்கு செல்வோர், காத்திருந்து ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விற்பனையாளர்கள் பற்றக்குறை இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரடங்கு அமலில் இருப்பதால், காலை, 8:00 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு, மாலை, 6:00 மணி வரை, பொருட்கள் வினியோகிக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு 25 கார்டுகள் என, தினமும் 100 கார்டுதாரர்களுக்கு சமூக இடைவெளியுடன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். குறிஞ்சிப்பாடி வட்டத்தில், 43 ரேஷன் கடைகளுக்கு, 70 விற்பனையாளர்களே உள்ளனர். ஒரு விற்பனையாளர் 2 முதல் 5 கடைகள் வரை பார்க்க வேண்டிய நிலையே உள்ளது.முழு நேர கடைகள் தவிர்த்து, பகுதி நேர கடைகள் வேறு உள்ளன. காலியாக உள்ள விற்பனையாளர்கள் இடங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிரப்பினால் பிரச்னை சரியாகும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X