வந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
Advertisement




latest tamil news


வந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே
தந்ததே நாட்டிற்கு பெருமையைத் தந்ததே

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்தது.


latest tamil news



அரியானா மாநிலம் அம்பாலா விமான நிலையத்தில் இந்த விமானங்கள் வந்திறங்கியதும் பன்னீர் தெளிப்பது போல தண்ணீரை தீயனைப்பு வாகனங்களில் இருந்து விமானங்கள் மீது பீய்ச்சியடித்து வரவேற்பு வழங்கப்பட்டது இதற்கு வாட்டர் சல்யூட் என்பர்.


latest tamil news


Advertisement


அம்பாலா நகரிலும் விமான நிலைய பகுதிகளிலும் மக்கள் திரளாக வருகைதந்து ரபேல் விமானங்களுக்கு வரவேற்பு வழங்கினர்.பலரது கைகளில் நமது தேசியக்கொடி காணப்பபட்டது.


latest tamil news



இந்த விமானத்தில் பல்வேறு சிறப்புகளில் ஒன்று பறக்கும் போதே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் ஒன்றாகும் அதன்படி ஐக்கிய எமிரேட்சின் மீது பறக்கும் போது எரிபொருள் நிரப்பப்பட்டது.இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை போர்க்கப்பல்களின் மீது எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும், 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும்,ஐநுாறு
கிலோமீட்டர் துாரத்தில் இருந்து இலக்கை தாக்க முடியும்,நீண்ட துாரம் இடைநில்லாமல் பறக்க முடியும்.


latest tamil news



ரபேல் விமானங்கள் எல்லைக்குள் நுழைந்ததும் அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை வெற்றிகரமாக தொடர்பு கொண்டன. போர்க்கப்பல்களில் இருந்து விமானங்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும் வழங்கப்பட்டது.


latest tamil news



இந்திய வான் எல்லையில் நுழைந்த விமானங்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ போன்ற புழக்கத்தில் உள்ள போர் விமானங்கள் விண்ணில் சந்தித்து அழைத்து வந்த காட்சி அற்புதமான காட்சியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X