காங்., அரசின் உழைப்பால் இறுதியில் பலன்: ரபேல் வருகை குறித்து காங்.,

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
புதுடில்லி: ரபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்., வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது என தெரிவித்துள்ளது.நம் விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. முதல்கட்டமாக 36 போர் விமானங்களில், 10 விமானங்கள்
Rafale, Congress, UPA govt, ரபேல், காங்கிரஸ்

புதுடில்லி: ரபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்., வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது என தெரிவித்துள்ளது.


latest tamil news


நம் விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. முதல்கட்டமாக 36 போர் விமானங்களில், 10 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், ஐந்து போர் விமானங்கள் பயிற்சிக்காக, பிரான்சிலேயே இருக்கும். மீதமுள்ள, ஐந்து விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியா வந்து சேர்ந்தன. ரபேலின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை' என புகழாரம் சூட்டியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், ரபேலின் வருகைக்கு காங்., கட்சி இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது: 2012ல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது. ரபேல் விவகாரத்தில் பா.ஜ., காங்., இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்தது. பா.ஜ., 36 ரபேல் வாங்கியுள்ளது. இதுவே காங்., கட்சியாக இருந்திருந்தால், 126 ரபேல் விமானங்களை வாங்கியிருக்கும். இதில் 108 ரபேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202021:59:44 IST Report Abuse
Tamilnesan தற்போதுள்ள அரசு எப்படி இந்த பொய், புரட்டுகளை கண்டும் காணாமலும் உள்ளது. மொத்த நேரு குடும்பத்தையும் ஏன் வெளிநாட்டிற்கு நாடு கடத்த தற்போதய அரசு தயங்குகிறது. மொத்தத்தில் அரசியலில் உள்ள அனைவரும் கூட்டணி தான் என்று பொதுமக்கள் நினைக்க தோன்றுகிறது. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
01-ஆக-202007:18:53 IST Report Abuse
Darmavan வெட்கம் கேட்ட காங்கிரஸ் ...இவர் காலத்தில் ஏன் வாங்கவில்லை.எல்லாம் செயலில் காட்டிய பிறகு தான் பெயர் தேட முயற்சி
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜூலை-202017:17:41 IST Report Abuse
Endrum Indian 2012ல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்., அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்துள்ளது???டப்பா அடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லையா??? பரிதாபமான நிலையில் காங்கிரஸ்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X