ரபேல் வருகைக்கு வாழ்த்து கூறி 3 கேள்விகளை எழுப்பிய ராகுல்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement

புதுடில்லி: ரபேல் வருகைக்கு வாழ்த்து கூறியுள்ள காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.



latest tamil news



நம் விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. முதல்கட்டமாக 36 போர் விமானங்களில், 10 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதில், ஐந்து போர் விமானங்கள் பயிற்சிக்காக, பிரான்சிலேயே இருக்கும். மீதமுள்ள, ஐந்து விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியா வந்து சேர்ந்தன. ரபேலின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை' என புகழாரம் சூட்டியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், ரபேல் வருகை குறித்து காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ரபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் மத்திய அரசு எனது மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

1. ரூ.526 கோடி மதிப்புள்ள ரபேல் விமானத்தை, ரூ.1,670 கோடி கொடுத்து எதற்காக வாங்கினீர்கள்?

2. 126 ரபேல் விமானங்களுக்கு பதில், வெறும் 36 விமானங்கள் மட்டும் ஏன் வாங்கப்பட்டது?

3. ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை, ஹெச்.ஏ.எல்.,லுடன் செய்யாமல், எதற்காக வங்கி மோசடியில் ஈடுபட்ட அனில் அம்பானிக்கு கொடுத்தீர்கள்? இவ்வாறு அவர் மத்திய அரசுக்கு கேள்வி கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
02-ஆக-202001:40:27 IST Report Abuse
தமிழ் வேந்தன் இங்க ஒருத்தன் கூடவா அறிவாளி இல்லை , மூணு கேள்விக்கு பதில் சொல்லுங்கடா பக்கிகளா
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
03-ஆக-202016:19:05 IST Report Abuse
இரா. பாலா1) ஏன் அதிக விலை எனில் அடுத்த முப்பது வருடங்களுக்கான சர்வீஸ், அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் ஆகியவை சேர்த்து விலை அதிகம். முதலில் உள்ள விலை எனில் சுதந்திர தினத்திற்கு கலர் பொடி தூவ மட்டுமே உபயோகப்படும். ஏன் அனில் எனில் டசால்ட் ஏவியேசன் இந்தியாவிடமிருந்து பெறும் பணத்தில் ஒரு பகுதியை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. அதன் அடிப்படையில் டசால்ட் நிறுவனம் அனில் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்து பரமரிப்பு வேலைகளைச் செய்யும். ஏன் வெறும் முப்பதாறு விமானங்கள் எனில் ... எல்லாவற்றையும் நானே சொல்வதால்தான் எதுவுமே தெரியாமல் ராகுல் போல பலர் கருத்து பதிவிடுகின்றனர். பத்திரிகைகளில் இது தொடர்பாக பல கட்டுரைகள் வெளி வந்துள்ளன, தேடிப் படித்துக் கொள்ளுங்கள். ராகுல் எல்லாம் தெரிந்தும் மக்களை திசை திருப்ப பதில் அளிக்கபட்ட கேள்விகளைக் கேட்டு மக்களை திசைதிருப்புகிறார்....
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
01-ஆக-202011:16:09 IST Report Abuse
Rameeparithi ட்விட்டர் கணக்கை முதலில் தடை செய்யுங்கோ ... தாங்கமுடியலைடா சாமி
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
01-ஆக-202010:13:36 IST Report Abuse
S.Ganesan சந்தைக்கு போகணும் ஆத்தா வையும். காசு குடு என்ற சப்பாணி வசனம் போலத்தான் இதுவும். திரும்ப திரும்ப ஒரே கேள்வி. வேறு கேள்வி தெரியவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே? நாட்டின் பாதுகாப்பு பற்றி தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை
Rate this:
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
03-ஆக-202002:40:56 IST Report Abuse
தமிழ் வேந்தன்பதில் சொல்ல துப்பு இருக்கா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X