அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோனியா உட்பட 13 கட்சிகளின் தலைவர்களுடன் ஸ்டாலின் பேச்சு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
சென்னை : இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, 13 கட்சிகளின் தலைவர்களிடம், தொலைபேசி வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆதரவு திரட்டினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று, காங்., தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூ., பொதுச் செயலர்
DMK, Stalin, MK Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, 13 கட்சிகளின் தலைவர்களிடம், தொலைபேசி வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆதரவு திரட்டினார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று, காங்., தலைவர் சோனியா, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூ., பொதுச் செயலர் டி.ராஜா.மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருடன், தொலைபேசி வழியே பேசினார்.

மேலும், ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்., தலைவர் சரத் வார், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரிடமும், ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார்.

'மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, ௫௦ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து, மூன்று மாதங்களில் முடிவெடுத்து, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்தும், தேசிய அளவில், அடுத்த கட்டமாக செயல்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து தலைவர்களிடமும், ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.'தீர்ப்பை நடைமுறைப் படுத்த, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்;

மாநில இட ஒதுக்கீடு சட்டங்களை பாதுகாக்க வேண்டும்' என, வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக, சோனியா உட்பட, ௧௩ கட்சிகளின் தலைவர்களிடம் ஸ்டாலின் பேசி, ஆதரவு கேட்டுள்ளார். இது குறித்து, ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.


துணை வேந்தர் தேர்வு


ஸ்டாலின் சந்தேகம்ஸ்டாலின் அறிக்கை: சென்னை பல்கலை துணை வேந்தர் பதவிக்கு, தேர்வுக் குழு அமைப்பதில், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத, இன்ஜினியரிங் கல்வி பின்புலம் உள்ள, டில்லி ஜவஹர்லால் பல்கலை துணை வேந்தரை, தலைவராக நியமித்துள்ளனர்.

இது, தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை அவமதிக்கும் செயல்.துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள, 177 பேரில், 12 பேரை மட்டும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேர்காணல் நடத்தி உள்ளனர். தேர்வுக் குழு தலைவர் நியமனம் துவங்கி, இறுதி வரை ஒட்டுமொத்த மர்மமாக, துணை வேந்தர் தேர்வு நடக்கிறது. எனவே, விண்ணப்பித்தவர்களில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே, துணை வேந்தராக நியமிக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-ஜூலை-202023:40:25 IST Report Abuse
elakkumanan வேலை இல்லை..........................பதவி இல்லை............வருமானம் இல்லை................................இருந்து பார்த்தாதான் தெரியும்............ ஏதோ அவங்களுக்குள்ள பேசிக்கிறாங்க.............................பாஷை முக்கியம் இல்லையே.........உணர்வுதான் முக்கியம்....... எல்லாருக்குமே ஒரே மாதிரி உணர்வு....நீண்ட இரவுகள்...திகில் கனவுகள்............அலறல் சத்தங்கள்.....அப சகுனங்கள்................அபயமில்லா தருணங்கள்...................இருண்ட எதிர்காலம் ....................சூன்ய மனநிலை.......மரண பீதி......இப்பிடி ஒரு ஒற்றுமை..................பேசிட்டு போகட்டும்......................என்னவோ ஒரு பாஷையில்.................
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
30-ஜூலை-202023:04:35 IST Report Abuse
Anbu Tamilan Jokers Discussions for nothing
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
30-ஜூலை-202022:46:09 IST Report Abuse
s t rajan தில்லு முல்லு கலகம்.... மற்ற இந்திய எதிரிக் கட்சிகளோடு சதி செய்வதை.....ஆலோசனை என்பது மன்னிக்க முடியாத பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X