அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை விதிக்க உத்தரவு: ராமதாஸ் வரவேற்பு

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை விதிக்க உத்தரவு: ராமதாஸ் வரவேற்பு

சென்னை : 'ஆன்லைன்' சூதாட்டங்களை தடை செய்ய, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வரவேற்றுள்ளார்.

அவரது அறிக்கை:ஆன்லைன் சூதாட்டங்களின் தீமைகள் தொடர்பான வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, 'ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.இது, சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மிகச் சரியான தீர்ப்பு. தெலுங்கானா மாநிலத்தில், ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு, முடிவு கட்டும் வகையில், அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும், அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்திலும், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், அதை செயல்படுத்துவதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்தும், மத்திய அரசு ஆராய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.புறக்கணிப்பு'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ௨௧ அரசு பல்கலைகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, அவற்றில் ஒரு பல்கலையில் கூட, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது.

அண்ணா பல்கலைக்கு, அடுத்த மாநிலத்தில் இருந்து, இறக்குமதி செய்து, துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்.உள்ளூரில், வன்னியர் சமுதாயத்தில், தகுதியான பேராசிரியர்கள் இருந்தும், வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவா சமூக நீதி... இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-ஜூலை-202012:49:09 IST Report Abuse
கல்யாணராமன் சு. அப்பாடா, ஒரு வழியா ஜாதியை பத்தி பேசாமே ஒரு நாள் இருக்காரே அப்படின்னு நினைக்கும்போது ஜாதியை உள்ளே கொண்டுவந்துவிட்டார்.. இவர் எப்போ ஜாதிவெறியை தன்னுடைய ரத்தத்திலிருந்து நீக்குகிறாரோ, அப்போதுதான், இவர் கட்சிக்கு விடிவுகாலம் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X