பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு கட்டணம்: வருது புதிய கட்டுப்பாடு!

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : பத்திரப்பதிவின் போது, முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணத்தை, 'ஆன்லைன்' முறையில் செலுத்துவதில், தனியார் தலையீட்டை குறைக்க, புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன.

தமிழகத்தில், ஆன்லைன் முறை பத்திரப்பதிவு திட்டம் அறிமுகப்படுத்திய பின், பல்வேறு குளறுபடிகள் தடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தில், பொதுமக்களே பத்திரங்களை உருவாக்கும் வழிமுறைகளை, பதிவுத்துறை அறிவித்துள்ளது.இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாகவே, ஆன்லைன் முறையில் பத்திர தகவல்களை உள்ளீடு செய்கின்றனர். ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவதில், 'கமிஷன் ஏஜன்ட்'டுகள் தலையீடு அதிகரித்து உள்ளது. இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:ஆன்லைன் முறையில், பத்திர தகவல்கள் உள்ளீடு செய்யப்படுகின்றன.

அதன் பின், கணினியில் தெரியவரும் கட்டணங்களை, 'நெட் பேங்கிங்' முறையில் செலுத்த வேண்டும். சிலர், தங்கள் வங்கிக் கணக்கில், 'நெட் பேங்கிங்' வசதி வாயிலாக, இத்தொகைகளை செலுத்துகின்றனர். இதற்காக, கமிஷனாக, ஒரு பத்திரத்துக்கு, 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். தமிழகம் முழுதும், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகம் அருகிலும், இப்படி சிலர், கட்டணம் செலுத்தும் பணிக்காக செயல்படுகின்றனர்.இதைத் தடுக்க, பொதுமக்களே நேரடியாக, தங்கள் வங்கிக் கணக்கின் வாயிலாக மட்டுமே, பணம் செலுத்த கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான வழிமுறைகளை, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.அப்போது தான், கட்டணம் செலுத்துவதில், கமிஷன் எஜன்ட்கள் தலையீட்டை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prasad - chennai,இந்தியா
30-ஜூலை-202013:50:59 IST Report Abuse
prasad ஆன் லைன் திட்டம் நல்லது தான் ஆனால் நடைமுறையில் பத்திர பதிவு செலவு கூடுகிறது மற்றும் கெடு புடி செய்கிறார்கள் ( லஞ்சம் ரேட் - நத்தம் பதிவு- க்கு Rs 10, 000 & சிறிய விவசாய நிலம் 15 சென்ட் க்கு 15 , 000 என கூடுதல் பணம் கேட்டகிறார்கள் ) இதனால் பத்திர பதிவு செய்யாமல் அன் ரெஜிஸ்ட்டட் டாக்குமெண்ட்டுகள் உருவாகிறது இதனால் அரசுக்கு வருவாய் குறைகிறது இதை தவிர்க்க இரண்டு வழிகள் ஏற்பாடு செய்யலாம் . 1 . பத்திர அலுவலகம் உள்ளே ஆன் லைன் பதிவு துறையால் சேவை மையம் அமைக்கலாம் டோக்கன் போட்டு தர , பணம் ஆன் லைன் மூலம் செலுத்த , பட்டா சரி பார்க்க மற்றும் தேவைக்காக ......இதற்கு கட்டணம் கூட வாங்கலாம் 2 . ஆன் லைன் மூலம் பத்திரம் பதிவு செய்ய மாவட்ட தலைநகர் -ல் ( online passport சேவா- மாதிரி ) பெரியதாக புது அலுவலகம் தொடங்கி மாவட்டத்தில் உள்ள எந்த ஊர் நிலத்தையும் பதிவு செய்யலாம் என நிலை வந்தால் இந்த ஆன் லைன் முறை மக்களுக்கு உபயோகமாக இருக்கும் . பத்திரம் நன்றாக சரிபார்த்து பின்னர் கொடுத்தல் கூட பிரச்சனை இல்லை பத்திரம் பதிவுக்கு முன் சரி பார்க்க கூடுதல் ஆட்கள் வைத்து சிறப்பாக செய்தால் மக்கள் படும் சிரமம் குறையும் லஞ்சம் குறையும் அரசு வருவாய் கூடும்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூலை-202009:18:03 IST Report Abuse
Darmavan நம் கணக்கின் நெட் பாங்கிங் மூலம் செலுத்தினால் கமிசன் ஏன் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X