பொது செய்தி

இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஓராண்டு நிறைவு; கோலாகலமாக கொண்டாட பா.ஜ., முடிவு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, வரும், 5ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை, நாடு முழுதும் கொண்டாட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், ஜம்மு - காஷ்மீருக்கு, அரசியல் சட்டத்தின், 370 மற்றும் 37 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. 'மிஷன் அக்கம்ப்ளிஷ்டு'இந்த இரு
Article 370, Kashmir, BJP, anniversary, India scrapping Article 370

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, வரும், 5ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை, நாடு முழுதும் கொண்டாட, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின், ஜம்மு - காஷ்மீருக்கு, அரசியல் சட்டத்தின், 370 மற்றும் 37 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.


'மிஷன் அக்கம்ப்ளிஷ்டு'


இந்த இரு பிரிவுகளையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. இது தொடர்பான மசோதா, பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, கடந்த ஆண்டு அக்டோபர், 31ல் பிரிக்கப் பட்டன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, வரும், 5ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறகிறது. இதை, நாடு முழுதும் சிறப்பாக கொண்டாட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதையொட்டி, 'மிஷன் அக்கம்ப்ளிஷ்டு' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

இதில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்க, பா.ஜ., தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைள், நடத்திய போராட்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த, 1949 முதல், 2019 வரை, ஜம்மு - காஷ்மீரில் நடந்த அனைத்து நிகழ்வுகளும், புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


'வீடியோ கான்பரன்ஸ்'

மேலும், 'ஏக் பாரத், ஏக் ஆத்ம பாரத்' என்ற பெயரில், நாடு முழுதும், ஆகஸ்ட், 5ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பிரசார நிகழ்ச்சிகளுக்கும், பா.ஜ., ஏற்பாடு செய்துஉள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் நோக்கம், இந்த நடவடிக்கையில் உள்ள முக்கியத்துவம் குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்யப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், 'முத்தலாக்' தடை சட்டம் பற்றியும் பிரசாரம் செய்யப்பட உள்ளது. இதற்காக, முஸ்லிம் பெண்கள் மற்றும் அறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. விழாவுக்காக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ஜிஜேந்தர் சிங், ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரைனா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு, விழா கொண்டாட்டங்கள் குறித்து, மாநில பா.ஜ., தலைவர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்தன


'ஜம்மு - காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் பெரிதும் குறைந்துள்ளன' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இந்த ஓராண்டில் அங்கு, பயங்கரவாத நடவடிக்கைகள் பெரிதும் குறைந்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், 36 சதவீதம் குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி முதல், ஜூலை, 15ம் தேதி வரை, ஜம்மு - காஷ்மீரில், 188 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. 2020ல் இது, 120 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில், 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 51 கையெறி குண்டு தாக்குதல்கள் நடந்தன. இந்த ஆண்டு, 136 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; 21 கையெறி குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு, ஜூலை, 15 வரை, ஆறு வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இந்த ஆண்டு, ஒரேயொரு தாக்குதல் மட்டுமே நடந்துள்ளது. பயங்கரவாதத்தில், உள்ளூர் இளைஞர்கள் சேருவது, 40 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
30-ஜூலை-202022:07:27 IST Report Abuse
J.Isaac கொரனோ காலத்தில் கொண்டாட்டமா ? வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளித்து கொண்டிருக்கும் போது இது தேவையா ?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202022:05:17 IST Report Abuse
RajanRajan SQUASH KASHMIR TERRORISM CELEBRATE INTEGRATED DAY OF KASHMIR WITH INDIA
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-ஜூலை-202021:43:54 IST Report Abuse
konanki ஆகஸ்ட் 5 சுடலு கான் கருப்பு வேட்டி கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X