பொது செய்தி

இந்தியா

கடற்படை தீவிர கண்காணிப்பு; சீனாவை சமாளிக்க தயார்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
China, India, Indian Navy, கடற்படை, கண்காணிப்பு, சீனா

புதுடில்லி : சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில், நம் கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில், கடற்படையின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்திய, சீன ராணுவம்இடையே, லடாக் எல்லையில், கடந்த மாதம், மோதல் ஏற்பட்டது. நம் எல்லையை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் வந்த சீன ராணுவத்துக்கு, நம் ராணுவம் சரியான பதிலடியை கொடுத்துள்ளது. எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கு, சீனாவுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, ராணுவம் மற்றும் துாதரக நிலையில் பேச்சு நடந்து வருகிறது.அதே நேரத்தில், சீனா எந்த முடிவெடுத்தாலும், அதை சமாளிக்க நம் படைகள் தயாராக உள்ளன என்பது உணர்த்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப, நம் ராணுவம் மற்றும் விமானப் படைகள், எல்லையில் படைகளை குவித்துள்ளன. எல்லையில், தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும், நம் கடற்படை முக்கிய போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளது. தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் அவை ஈடுபட்டுள்ளன. இதை தவிர, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன், நம் கடற்படை போர் பயிற்சியிலும் ஈடுபட்டது.

நம் கடற்படையின் இந்த நடவடிக்கைகள், நாங்கள் எதற்கும் தயார் என்பதை கடற்படையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தென் சீன கடலின் பெரும்பகுதியை, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சீனாவின் போக்கை கண்டித்துள்ள அமெரிக்கா, தனது கடற்படையின் முக்கிய போர்க் கப்பல்களை, தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பியது.நட்பு நாடுகளுடன் இணைந்து, அமெரிக்க கடற்படை, அங்கு போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதனால், அமெரிக்காவை சமாளிக்க, சீன கடற்படை தன் போர்க் கப்பல்களை, தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பியது. இதனால், இந்திய பெருங்கடல் பகுதிக்குள், சீனா அத்துமீறி நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.


20 வீரர்கள் பெயர் பொறிப்பு


டில்லியில் உள்ள, தேசிய போர் நினைவு சின்னத்தில், நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. லடாக்கில், சீனாவின் அத்துமீறலை தடுக்கும் போது நடந்த மோதலில் உயிரிழந்த, 20 வீரர்களின் பெயர்களும், அங்கு பொறிக்கப்பட உள்ளதாக, ராணுவ அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
30-ஜூலை-202009:56:09 IST Report Abuse
Chandramoulli அடுத்த 10 வருடங்களுக்கு தேர்தல் என்பதே தேவை இல்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். திரு .மோடி அவர்கள் தலைமையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும். ராணுவ பலத்தை அதிகரித்தால் மட்டுமே சீனாவை , பாக்கிகளை அடக்கி வைக்க முடியும்
Rate this:
Cancel
Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா
30-ஜூலை-202008:34:37 IST Report Abuse
Senthil Kumar Kandasamy Mr. Kunjumani, இந்தியாவை, பக்கத்து நாடுகளுக்கு பிறிச்சி கொடுத்துடலாமா?? நமக்கு எந்த செலவும் இருக்காது.....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-ஜூலை-202005:10:14 IST Report Abuse
RajanRajan இந்தியாவின் உலகளவிலான நட்புக்கரமும் தேவையை அனுசரித்து போர்கரங்களும் ஓன்று சேர வலுவடைந்துள்ளது என்பதை உணர்ந்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். நல்லாட்சி தெளிவான சிந்தனை உன்னதமான தேச பற்று மிக்க தேசமாக எழுச்சி பெறுவோமாக. வந்தே மாதரம். ஜெய் ஜவான் ஜெய் கிஷான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X