சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனித உரிமை கமிஷன் கலெக்டருக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ஜாதி சான்று கோரி விண்ணப்பித்த இருளர் இன மாணவி மீது, நான்கு பேர் தாக்குதல் நடத்தியது குறித்து, அறிக்கை அளிக்க, விழுப்புரம் கலெக்டருக்கு, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகள் தனலட்சுமி. இவர், பிளஸ் 2 தேர்வில், 354 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்தார்.இருளர் இனத்தை சார்ந்த அவர், மருத்துவ படிப்பு படிக்க விரும்பி, தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, விழுப்புரம் கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தார். ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து, தனலட்சுமியின் கிராமத்துக்கு, விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், விசாரணைக்கு சென்றனர். அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர், தனலட்சுமிக்கு இருளர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, ஏற்பட்ட தகராறில், நான்கு பேர், மாணவி தனலட்சுமியை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், விழுப்புரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'ஜாதி சான்று கோரி விண்ணப்பித்த இருளர் இன மாணவி மீது, நான்கு பேர் தாக்குதல் நடத்தியது குறித்து, நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூலை-202009:23:41 IST Report Abuse
Darmavan .ஏன் ஆட்சேபித்தனர் தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X