அரசு வீடுகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசு வீடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி வைத்துள்ளது.

பிரமாண பத்திரம்டில்லி உயர் நீதிமன்றத்தில், 'சென்னை பினான்ஷியல் மார்க்கெட்ஸ் அண்ட் அக்கவுன்ட்டபிலிடி' என்ற சமூக அமைப்பு, மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஆறு மாதங்களை கடந்தும், அரசு வீடுகளில் தங்கியுள்ளனர்.குறிப்பாக, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'பார்வேர்ட் மார்க்கெட் கமிஷனின்' முன்னாள் தலைவர் ஒருவர், ஓய்வு பெற்ற பின்பும், அரசு வீட்டில் இன்னும் தங்கியுள்ளார்.இவரை போன்ற வர்கள் மீது, இதுவரையிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆகையால், அவர்களை அரசு வீடுகளில் இருந்து, உடனடியாக வெளியேற்ற உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதை, ஜூலை, 8ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் அடங்கிய அமர்வு, மனுவை தாக்கல் செய்துள்ள அமைப்புக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, மனுதாரரான சென்னை பினான்ஷியல் மார்க்கெட்ஸ் அண்ட் அக்கவுன்ட்டபிலிடி அமைப்பு, 'தங்களுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கும் இடையே, எந்தவொரு முன்விரோதமும் இல்லை' என்ற பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. 'டெபாசிட்'மேலும், முன்பணமாக, 35 ஆயிரத்தை, நீதிமன்றத்தில் 'டெபாசிட்' செய்தது. வழக்கில் மனுதாரர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிக்கு, அந்த பணம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி படேல் தலைமையிலான அமர்வு, மத்திய வீட்டுவசதி துறைக்கும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அரசு அதிகாரிக்கும், நாளைக்குள் பதிலளிக்கக்கோரி, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூலை-202009:20:58 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி டெபாசிட் கேட்பது சரியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X