பொது செய்தி

இந்தியா

மும்பை குடிசை பகுதியில் 57 சதவீதம் பேர் பாதிப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மும்பை : மும்பை, குடிசைப் பகுதியில், 57 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்து உள்ளது.
ரத்தத்தில் உள்ள சீரத்தை பிரித்து, அதில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு செல்கள் உள்ளதா என்பது குறித்து மும்பை மாநகராட்சி, ஆய்வு மேற்கொண்டது. இது குறித்து, மும்பை நகராட்சி கூடுதல் ஆணையர், சுரேஷ் ககானி கூறியதாவது:ஜூலை, 1 - 14 வரை, டாடா அடிப்படை ஆய்வு மையம், 'நிடி ஆயோக்' ஆகியவற்றுடன் இணைந்து, மும்பையில், சீரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மும்பையில் வசிக்கும், 1.84 கோடி பேரில், 6,936 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், வைரசை எதிர்க்கும் போது உருவாகும், ஐ.ஜி.ஜி., எனப்படும், நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளனவா என, ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், மும்பையின் குடிசைப் பகுதிகளில், 57 சதவீதம் பேர் அறிகுறியின்றி கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்தது. அதாவது அவர்களின் ரத்தத்தில், ஐ.ஜி.ஜி., உள்ளது. இதனால், அவர்கள் தன்னிச்சையாக குணமடைந்து உள்ளனர்.அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வாய்ப்பு உள்ளதால், அங்கு, 16 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மும்பையில், மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று முன்தினம், கொரோனா பாதிப்பு, 717 ஆக குறைந்துள்ளது. அங்கு, 20 ஆயிரத்து, 251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X