ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட கவர்னர் ஒப்புதல்!

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Rajasthan Political Crisis, Kalraj Mishra, Ashok Gehlot, Governor,ஆளுநர்,கவர்னர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரிய, கெலாட் அரசின் பரிந்துரையை ஏற்று, ராஜஸ்தான் சட்டசபை கூட்டம், ஆக., 14ம் தேதி துவங்கும் என, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா நேற்றிரவு அறிவித்தார். கொரோனா பரவலை தடுக்க, சட்டசபை கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அரசிடம் கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன.


'சரியா இல்லியே!'

சச்சின் பைலட்டையும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த, முதல்வர் கெலாட், இது குறித்து, கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவிடம் கடிதம் அளித்தார். இந்த கடிதத்தில், சட்டசபையை கூட்டுவதற்கான காரணம், தேதி ஆகியவை இல்லை என கூறி, கவர்னர் நிராகரித்தார்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காகவும், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்வதற்காகவும், வரும், 31க்குள் சட்டசபையை கூட்ட கோரி, புதிய கடிதம், கெலாட் சார்பில் கவர்னரிடம் அளிக்கப்பட்டது.இந்தக் கடிதத்தையும் கவர்னர், கூடுதல் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். 'நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த விரும்புகிறீர்களா? கோப்புகளில் அதுபற்றிய குறிப்புகள் இல்லாதது ஏன்?' என, அதில், கவர்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, சட்டசபையை கூட்டக் கோரி, கவர்னரிடம், கெலாட் சார்பில், மூன்றாவது கடிதம், நேற்று முன்தினம் கொடுக்கப்பட்டது. அதில், 'நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப் போவதில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தையும், கவர்னர் மிஷ்ரா நேற்று திருப்பி அனுப்பினார்.


'லவ் லெட்டர்!'

'மாநிலத்தில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இப்போது, சட்டசபையை கூட்டினால், உறுப்பினரால், சமூக இடைவெளியை எப்படி கடைப்பிடிக்க முடியும்?' என, கவர்னர் கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து, முதல்வர் கெலாட் கூறுகையில், ''லவ் லெட்டர் மீண்டும் திரும்பி வந்துள்ளது. கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னருடன் டீ குடிக்க போகிறேன்,'' என்றார்.

இதன்பின், கவர்னர் மாளிகைக்கு சென்ற கெலாட், மிஷ்ராவை சந்தித்து பேசினார். சரியாக, 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, 'சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டிய காரணத்தை தெரிவிக்க முடியவில்லை. 'வழக்கமாக, 21 நாள் அவகாசம் கொடுத்து, சட்டசபையை கூட்டும் கடிதத்தை கொடுக்க வேண்டும்' என, கெலாட்டிடம் கவர்னர் கூறியதாக, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'அமைச்சரவை கூடி, சட்டசபையை கூட்ட முடிவு செய்து, தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. 'ஆனால், சட்டசபையை கூட்ட கவர்னர் மறுப்பது ஏன் என, தெரியவில்லை. இது பற்றி விசாரிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


ஒப்புதல்


இதற்கிடையே, கெலாட் அரசின் பரிந்துரையை ஏற்று, ராஜஸ்தான் சட்டசபை கூட்டம், ஆக., 14ம் தேதி துவங்கும் என, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா நேற்றிரவு அறிவித்தார். கொரோனா பரவலை தடுக்க, சட்டசபை கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அரசிடம் கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.


டோடாசரா நியமனம்:

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக, கோவிந்த சிங் டோடாசரா நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றார். டோடாசரா கூறுகையில், ''என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பொறுப்பை வழங்கிய, சோனியா, ராகுலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில், 2023ம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபடுவேன்,'' என்றார்.

இதற்கிடையே, மாநில அமைச்சரவை கூட்டம், கெலாட் தலைமையில், ஜெய்ப்பூரில் நேற்று மாலை நடந்தது. இதில், சட்டசபையை, ஆக., 14ல் கூட்ட, கவர்னருக்கு மீண்டும் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருத்தப்பட்ட பரித்துரை, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, சபாநாயகர் ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


ஐகோர்ட்டில் பகுஜன் வழக்கு:

ராஜஸ்தானில், கடந்த, 2018ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். கெலாட் அரசுக்கு, பகுஜன் ஆதரவு அளித்தது. கடந்த ஆண்டு, செப்டம்பரில், பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரும், காங்கிரசில் இணைந்தனர். இவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக, சபாநாயகர் அங்கீகரித்தார். இதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மாயாவதி, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்,'காங்கிரசுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், சரியான பாடம் புகட்டுவதற்கான நேரம் வந்துள்ளது. என் கட்சி எம்.எல்.ஏ.,க்களை திருடிய காங்கிரசை, இனியும் சும்மாவிட மாட்டேன்' என, கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரசில், ஆறு எம்.எல்,ஏ.,க்கள் இணைந்ததை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், பகுஜன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சுதந்திர தின விழா ரத்து:

ராஜஸ்தானில், கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கவர்னர் மாளிகையில், ஆக., 15ம் தேதி நடக்க இருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை, கவர்னர் மிஷ்ரா ரத்து செய்துள்ளார். மேலும், 'சுதந்திர தின விழாவில் கூட்டமாக கூடி கொண்டாடுவதை தவிர்த்து, அவரவர் வீடுகளில் கொண்டாட வேண்டும்' என, மக்களை கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதிருப்தி எம்.எல்.ஏ., வழக்கு:

'கெலாட் அரசை முடக்க பா.ஜ., சதி செய்கிறது. இது தொடர்பாக, அதிருப்தி எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மாவுடன், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியுள்ளார்' என, குற்றம்சாட்டி, 'ஆடியோ டேப்' ஒன்றையும் காங்கிரஸ் வெளியிட்டது. இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு போலீசார், மத்திய அமைச்சர் ஷெகாவத், அதிருப்தி எம்.எல்.ஏ., சர்மா ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், சர்மா மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், 'இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு போலீசாருக்கு மாற்ற வேண்டும்' என, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் சட்டசபையைக் கூட்டுவதற்கு கூட கவர்னர் அனுமதி குடுத்தால்தான் முடியும். அவர் கூட்டுவதற்க்கு அனுமதிக்கவில்லை என்றால் சட்ட சபை குப்பைகளால் நாறிக் கொண்டுதான் இருக்கும். இந்த அநியாயத்தை ஐநா சபையில்தான் சொல்ல முடியும்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் பாருங்கள் சங்கிகளின் அநியாயத்தை! சட்டசபையைக் கூட்டுவதற்கு கூட கவர்னர் அனுமதி குடுத்தால்தான் முடியும். அவர் கூட்டுவதற்க்கு அனுமதிக்கவில்லை என்றால் சட்ட சபை குப்பைகளால் நாறிக் கொண்டுதான் இருக்கும். இந்த அநியாயத்தை ஐநா சபையில்தான் சொல்ல முடியும்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
30-ஜூலை-202016:22:26 IST Report Abuse
Raj கவர்னர் என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஜூலை-202001:57:21 IST Report Abuse
தமிழ்வேல் கஷ்டம், கஷ்டம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X