சசிகலா புஷ்பாவின் 'வீடியோ'க்களை நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த, சசிகலா புஷ்பா தொடர்பான, 'வீடியோ'க்கள் மற்றும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.

அ.தி.மு.க.,வின் ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியதை அடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஏப்., மாதம் பா.ஜ.,வில் இணைந்தார்.ரூ.2 லட்சம் அபராதம்இவர், தன் புகைப்படம் மற்றும் 'வீடியோ'க்களை, மற்றொருவருடன் 'மார்பிங்'செய்து வெளியிட்டு களங்கம் விளைவிப்பதாக, 'கூகுள், பேஸ்புக், யூ டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தனி நீதிபதி, 'மக்கள் பிரதிநிதிகள், திரை மறைவில் யாரை சந்திக்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிமை உண்டு.'புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க கோரும் உரிமை, மனுதாரருக்கு இல்லை; அவர் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, ஜூன், 2ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சசிகலா புஷ்பா, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு சமூக வலைதள நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

மூன்றாம் தரப்பினர்இந்நிலையில், நேற்று சசிகலா புஷ்பாவின் மனு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நீதிபதிகள், சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சமூக வலைதளங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினர் என்றும் அவர்கள் தரப்பில், புகைப்படம், வீடியோ போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில்லை' என்றும் கூறினர்.அப்போது சசிகலா புஷ்பா தரப்பு வழக்கறிஞர், முறைகேடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பட்டியலை தாக்கல் செய்ததுடன், அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்னை தொடர்பாக, சமூக வலைதளங்கள் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 3ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.சமூக வலைதளங்கள், தலா, 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சமூக வலைதளங்களில் உள்ள, சசிகலா புஷ்பா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
30-ஜூலை-202016:01:05 IST Report Abuse
Baskar குற்றம் செய்தவர்கள் எல்லாம் பி.ஜெ.பி யில் சேர்ந்தவுடன் புனிதமாகி விடுகின்றனர் .திருடன் கொள்ளைக்காரன் ஊரை அடித்து உலையில் போட்டவன் நாட்டையே கொள்ளை அடித்து போனவனுக்கு இந்த லிஸ்டில் இடம் உண்டு. ஆக எது வேண்டுமானாலும் செய்து விட்டு பி.ஜெ.பி யில் சேர்ந்தால் பாவமன்னிப்பு கிடைக்கும் சசிகலா புஷ்ப்பாவிற்கு கிடைத்தது போல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X