பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளம் தோண்டும் நவீன இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 பள்ளம் தோண்டும் நவீன இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

சென்னை : 'டிராக்டரில் இயங்கும் பள்ளம் தோண்டும் நவீன இயந்திரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பாசன நீரை சேமித்து, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு தேவையான பிரதான குழாய் மற்றும் துணை பிரதான குழாய்கள் பதிக்க, நீண்ட பள்ளம் வெட்ட வேண்டியுள்ளது.வேலையாட்கள் பற்றாக்குறையால், இப்பணிகள் தாமதமாகிறது. எனவே, பள்ளம் வெட்டவும், மரம் நடுவதற்கு குழிகளை தோண்டவும், நிலத்தை சமன் செய்யவும், வயல்களில் வரப்புகள் அமைக்கவும், வேளாண் பொறியியல் துறையால், டிராக்டரில் இயங்கக் கூடிய நீண்ட பள்ளம் தோண்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில், நான்கு; திருவள்ளூர், தஞ்சாவூரில் தலா, மூன்று; திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், தேனி, துாத்துக்குடி மாவட்டங்களில், தலா, இரண்டு.காஞ்சிபுரம், வேலுார், நாகப்பட்டினம், கோவை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், தலா, ஒரு இயந்திரம் என, மொத்தம், 28 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களுக்கு வாடகையாக, டிராக்டருடன் ஒரு மணி நேரத்திற்கு, 340 ரூபாய் கட்டணமாக, அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இயந்திரம் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு, ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X