சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இப்போது பலரும் நாய்க்கு உணவளிக்கின்றனர்!

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ஊரடங்கு காலத்தில், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும், புதுச்சேரி மாணவி ராஜலட்சுமி: சமூகப் பணி பாடத்தில், முதுகலை படித்து வருகிறேன். யு.பி.எஸ்.சி., தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது, என்னால் முடிந்த சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எங்கள் வீட்டில் நாய்களை வளர்க்கிறோம். அதனால், நாய்கள் மீது எனக்கு தனி பாசம் உண்டு.

ஊரடங்கு நேரத்தில், ஏழைகளுக்கே உண்ண உணவு கிடைக்காத நிலையில், வாயில்லாத ஜீவன்களான நாய்கள் என்ன செய்யும் என, யோசித்த போது, அவற்றில் பெரும்பாலானவை, பட்டினியாக சுற்றிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. என் நண்பர் பாலமுருகனிடம் இது பற்றி பேசிய போது, இருவரும் சேர்ந்து, நாய்களுக்கு உணவளிக்க முடிவு செய்தோம். தினமும், 25 கிலோ உணவு சமைக்கிறோம். அதை, 200க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வழங்குகிறோம். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணான எனக்கு, தினமும், 25 கிலோ உணவு தயாரிப்பது மிகவும் சிரமமானது தான்.

நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின்உதவியுடன், இந்தப் பணியை செய்து வருகிறேன். சிலர் அரிசி, உணவு போன்றவற்றை தருகின்றனர்; சிலர், சிக்கன் வாங்கி தருகின்றனர்; சிலர் பணம் தருகின்றனர். அவற்றை பெற்று சமைத்து, உணவாக மாற்றி, நாய்களுக்கு பரிமாறுகிறோம். காலை, 11:00 மணிக்கு உணவு வழங்கும் பணி துவங்கும். பகல், 3:00 மணிக்குள் முடிந்து விடும்.எனினும், இது சாதாரண பணியல்ல. பெரிய பாத்திரத்தை, எங்களின், இரு சக்கர வாகனத்தில் வைத்தபடி ஓட்டிச் செல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில், குறிப்பிட்ட துாரத்தில், 'டிஸ்போசபிள்' தட்டுகளை வைத்து, அதில் உணவை வைத்து, நாய்களுக்கு உணவளிக்கிறோம்.

பசியில் நாள் முழுக்க காத்திருக்கும் நாய்கள், எங்கள் வண்டியின், 'ஹார்ன்' சத்தம் கேட்டதும், எங்களை பின் தொடர்ந்து, ஆர்வமாக ஓடி வரும். பிற நேரங்களில், நாங்கள் எங்காவது சென்றால், எங்களை பின்தொடர்ந்து வந்து, ஆர்வமாக தொற்றிக் கொண்டு, பாசத்தை வெளிப்படுத்தும்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், ஒரு பக்கம் துவக்கி, அதில் தெருவோர நாய்களின் படங்களை போட்டு, ஆதரவை திரட்டி வருகிறோம். அதில் உள்ள நாய்க்குட்டிகளின் படங்களைப் பார்த்து, அவற்றை பலர் தத்து எடுத்தும் உள்ளனர்.

ஊரடங்கு சமயத்தில், தெருத் தெருவாக சென்று, நாய்களுக்கு உணவளிப்பதில், பல சிரமங்கள் உள்ளன. எனினும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், தொடர்ந்து செய்கிறோம். இப்போது எங்களைப் பார்த்து சிலரும், தங்கள் வீடுகளின் முன் கிடக்கும் நாய்களுக்கு, உணவு வைக்க துவங்கியுள்ளனர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X