பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை நீடிக்குமா?

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், படிப்படி யாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்ற, அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 'டாஸ்மாக்' கடைகளுக்கு, ஞாயிறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பலரிடமும் எழுந்துள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 கடைகள் வாயிலாக, மது விற்பனை செய்கிறது. தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய்க்கும்; சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், 120 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும், மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை மதுக் கடைகள் செயல்பட்டன.மார்ச், 24ல், ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், மதுக் கடைகளும் மூடப்பட்டன. பின், வைரஸ் பாதிப்பு குறைவான பகுதிகளில், மே, 16ல் இருந்து கடைகள் திறக்கப்பட்டன. வேலை நேரம், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணியாக குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் முதல் இரவு, 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

வைரஸ் பரவலை தடுக்க, இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு, முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டது. இதனால், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும், மது கடைகள் மூடப்பட்டன. இது, நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பலரிடமும் எழுந்துள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில், மது கடைகள் மூடப்பட்டதால், குடும்பங்களில், மது போதையால் ஏற்படும் பிரச்னைகள் குறைந்தன. மீண்டும் மது கடைகள் திறக்கப்பட்டதால், குறைந்த வருவாய் கிடைக்கும் நிலையிலும், பலர் மதுவிற்கு அதிக செலவு செய்கின்றனர்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

எனவே, ஊரடங்கு முழுதுமாக தளர்த்தப்பட்டாலும், படிப்படியாக மது விலக்கு என்ற, ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகளுக்கு, ஞாயிறு விடுமுறையை, அரசு நீட்டிக்க வேண்டும்.மேலும், இரவு, 7:00 மணிக்குள் கடைகளை மூடும் வகையில், நேரம் குறைப்பு செய்ய வேண்டும். இதனால், மது பிரியர்கள், இரவில் சீக்கிரமாக வீடு திரும்புவர். ஞாயிற்றுக் கிழமைகளில், கூட்டம் கூடி மது அருந்துவது தடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X