பொது செய்தி

இந்தியா

இணையவழி தாக்குதல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுடில்லி : இணைய வழி தாக்குதல்களில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், சிங்கப்பூருக்கு அடுத்ததாக, இந்தியாவில் தான் அதிகம் நடந்துள்ளதாக, 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள, 2019ம் ஆண்டுக்கான இணைய பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யம்படி குறிப்பிட்டு, இணையத் திருடர்கள், தகவல்களை திருடுவது, கடந்தாண்டு அதிகரித்துள்ளது. இந்தியாவில், 2018ம் ஆண்டில் இருந்ததைவிட, 2019ம் ஆண்டில், 27 சதவீதம், அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதன் மூலம், தகவல் திருடப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில், 11வது இடத்தில் இருந்து இந்தியா, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்த முறை, பயனாளிகளின் ரகசிய குறியீடுகள், எண்கள் மற்றும் நிதி தொடர்பான தகவல்களை, இணையத் திருடர்கள் திருடியுள்ளனர்.இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இணைந்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல், சர்வதேச சராசரியை விட, ஐந்து மடங்கு அதிகமாகும். அதேபோல், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடந்துள்ள தாக்குதல்கள், உலகின் மற்ற பகுதிகளில் நடந்துள்ள தாக்குதலைவிட, 1.7 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X