ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்; திமுக சொந்தம் கொண்டாடலாமா?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்; திமுக சொந்தம் கொண்டாடலாமா?

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (26)
Share
'மருத்துவக் கல்வியில், ஓ.பி.சி.,க்கு, இடஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, தி.மு.க., சொந்தம் கொண்டாடுவதை, கேலியும், கிண்டலும் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.'மருத்துவக் கல்வியில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க, சட்ட ரீதியாக, எந்தத் தடையும் இல்லை' என, சமீபத்தில், சென்னை, உயர் நீதிமன்றம் தீர்ப்பு
OBC reservation, DMK, Social Media, திமுக, ஓபிசி, இடஒதுக்கீடு

'மருத்துவக் கல்வியில், ஓ.பி.சி.,க்கு, இடஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, தி.மு.க., சொந்தம் கொண்டாடுவதை, கேலியும், கிண்டலும் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

'மருத்துவக் கல்வியில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க, சட்ட ரீதியாக, எந்தத் தடையும் இல்லை' என, சமீபத்தில், சென்னை, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட, ௧௩ கட்சிகளின் தலைவர்களிடம், 'இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான, தி.மு.க., போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்' என, ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இடஒதுக்கீடு தீர்ப்பு பெறுவதற்கு, தி.மு.க., மட்டும் தான் முக்கிய காரணமாக இருந்தது என, தன் அறிக்கையில், ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பு பெறுவதற்கான வழக்கை, தி.மு.க., மட்டுமல்ல, அ.தி.மு.க., - காங்கிரஸ், - பா.ம.க., - ம.தி.மு.க., என, பல்வேறு கட்சிகளும் தொடுத்திருந்தன. ஆனால், 'இது தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி என, ஸ்டாலின் முன்னிலைப்படுத்தி, விளம்பர அரசியல் செய்கிறார்' என, சமூக வலைதளங்களில், கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.


உத்தரவு:

இது குறித்து, சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ள விமர்சனம்: எது நடந்தாலும், தன்னால் நடந்தது என, எல்லாவற்றிலும் பெயர் தேடுவது, விளம்பர அரசியல். இதைத் தான் ஆதிகாலத்தில் இருந்து, தி.மு.க., செய்து வருகிறது. தற்போது, ஓ.பி.சி., இடஒதுக்கீடு விவகாரத்திலும் செய்துள்ளது. மருத்துவக் கல்வியில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு என, தி.மு.க., தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக, ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

இடஒதுக்கீடு பிரச்னைக்கு, தி.மு.க., மட்டுமா வழக்கு போட்டது? தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி உட்பட முக்கால்வாசி கட்சிகளும் வழக்கு போட்டுள்ளன. அதன் விளைவாக வந்த தீர்ப்பு தான் இது. தி.மு.க., - எம்.பி., ஒருவர் அளித்த பேட்டியில், '2007ல் இருந்து, பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சொல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்து விட்டது.

'ஆனாலும் கூட, அப்போதையே காலக்கட்டத்தில், இது குறித்த விழிப்புணர்வு, பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே இருந்ததில்லை. எனவே, அதை அமல்படுத்தச் சொல்லி, அப்போதைய காங்கிரஸ் அரசை வற்புறுத்தாமல் விட்டது தவறு தான்' என, கூறியுள்ளார்.


கறுப்பு நாட்கள்:

தி.மு.க., - எம்.பி., குறிப்பிடுகிற மாதிரி, 2007ல், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த, தி.மு.க., மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான அரசிலும் அங்கம் வகித்தது. 'சமூக நீதி வரலாற்றில், இது ஒரு பொன்னாள்' என, ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்; ஆனால், 2007ல் இட ஒதுக்கீட்டை கண்டுகொள்ளாமல் விட்டது, கறுப்பு நாட்கள் தானே! அந்த கறுப்பு நாட்களை உருவாக்கிய பெருமை, தி.மு.க.,வை தானே சேரும். நல்லது நடந்தால் மட்டும், அதற்கு தி.மு.க., காரணம்; கெட்டது நடந்தால், அதை பற்றி தி.மு.க., பேசாது.

கடந்த, 2007ல், உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு அமல்படுத்த சொல்லி தீர்ப்பு வழங்கியும், அதை செயல்படுத்தாத, காங்கிரஸ் கட்சியை கண்டித்து, தட்டிக் கேட்டு, அன்றைக்கு இட ஒதுக்கீட்டிற்கு வலுவான சட்டத்தை இயற்றிருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது.


நாடகம்:

அன்று வாரிசுகளுக்கு, மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கவே, தி.மு.க., குறியாக இருந்து, மற்றதை கோட்டை விட்டு விட்டது. இன்றைக்கு, அதற்காக போராடுவது போல், நாடகம் ஆடுகிறது. மத்திய கூட்டணியில் இருக்கும்போது, அநீதிக்கு எதிராக போராட வேண்டும். அதை தான், அ.தி.மு.க., தற்போது செய்துள்ளது. எந்த ஆட்சியும், கட்சியும், மத்திய அரசின் பொம்மையாக இருக்கிறது என்று சொன்னார்களோ, அந்த அ.தி.மு.க., தான், வழக்கு போட்டு, நீதி கிடைக்க செய்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X