சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் சம்பா பருவத்திற்கு விதைகள் இருப்பு வைத்துள்ளதை விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு, புவனகிரி பகுதிகளில் உள்ள அரசு விதை பண்ணைகள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள இருப்புகள் குறித்து கடலுார், விழுப்புரம் மாவட்டங்களின் விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா ஆய்வு செய்தார்.ஆய்வில், சம்பா பருவம் துவங்க உள்ள நிலையில் பருவத்திற்கான விதை நெல் மூட்டை இருப்பு, விதை சுத்திகரிப்பு நிலையங்களில் தரமான விதைகள் உள்ளதா எனவும், தனியார் விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் கொள்முதல் செய்துள்ளனரா என ஆய்வு செய்தார்.பேரிடர் காலமான கொரோனா காலத்தில் மாவட்டத்தில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டாரத்தில் ஆய்வு செய்து, 576 விதை மாதிரிகள் எடுத்து தரப் பகுப்பாய்விற்கு கடலுார் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.விதை விற்பனையாளர்களும், விவசாயிகளும் விழிப்புணர்வுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர். ஆய்வின் போது கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE