வங்கி ஊழியருக்கு கொரோனா | Dinamalar

வங்கி ஊழியருக்கு கொரோனா

Added : ஜூலை 29, 2020
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நெல்லிக்குப்பம் கிளையில் பணி புரியும் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஊழியருக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று காலை நெல்லிக்குப்பம் கிளையை வழக்கம் போல் திறந்தனர். பெண்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நெல்லிக்குப்பம் கிளையில் பணி புரியும் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஊழியருக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று காலை நெல்லிக்குப்பம் கிளையை வழக்கம் போல் திறந்தனர். பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் கிடைத்ததால் கிருமி நாசினி தெளித்து, வங்கியை தற்காலிகமாக மூடினர்.அதே வளாகத்தில் இருக்கும் எல்.ஐ.சி.,நிறுவன அலுவலகத்தில் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தும் வாடிக்கையாளர்களுக்கு கையை சுத்தம் செய்ய திரவம் வழங்கியும் தனிமனித இடைவெளியை பின்பற்றியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தனர்.நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சைக்கு சென்றார். இதற்கு முன் இரண்டு போலீசாருக்கு கொரோனா உறுதியாகி, ஒருவர் குணமடைந்து பணிக்கு திரும்பினார். மற்றொருவர் சிகிச்சையில் உள்ளார்.புகார் கொடுக்க கூட்டமாக வருவதால் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X