மானியத்தில் நெல் விதைகள் வாங்கி பயன்பெற அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் நெல் விதைகள் வாங்கி பயன்பெற அழைப்பு

Added : ஜூலை 29, 2020
Share

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு, புவனகிரி வட்டாரத்தில் சம்பா பயிரிடும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு மானிய திட்டத்தில் விதை நெல் வாங்கி பயன்பெறலாம்.இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுதமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேல்புவனகிரி வட்டாரம், சேத்தியாத்தோப்பு வட்டாரங்களில் விவசாயிகள் சம்பா பருவத்திற்கான நாற்றுவிடும் பணிகளை துவங்கியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு வேளாண் விரிவாக்க மையம், புவனகிரி வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்டகால நெல் விதைகள், மத்திய கால நெல் விதைகளான என்எல்ஆர் 34449, சிஆர் 1009 சப்-1, பீபீடி 5204, டிகேஎம் 13, விதை ரகங்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.சம்பா சாகுபடிக்காக விதை தேவைப்படும் விவசாயிகள் மேற்கண்ட வேளாண் விரிவாக்க மையங்களை நேரில் அணுகி மானியத்தில் விதைகளை பெற்று பயன் பெறலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X