கடலுார்; கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் 2020--2021ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2010 ம் ஆண்டு 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைனில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப் பணியாற்றிதற்கான ஆதாரங்கள் மற்றும் தகுதிநிலைச் சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பபடிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.500, கட்டணமில்லா பஸ் பயண சலுகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் செப்., 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE