கடலுார்; கொரோனாவால் பாதித்த அதிகாரிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்மென பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.இது குறித்து கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் அளித்த மனு:மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பொது மக்கள் மட்டுமின்றி வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பாதித்துள்ளனர். எனவே, மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரம், நகராட்சி, காவல் துறை அதிகாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.கொரோனா பாதித்த அதிகாரிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்ராயன், அப்துல் கலாம் பேரவை தலைவர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் குரு ராமலிங்கம், வி.சி., கட்சி மாநில அமைப்பு செயலர் திருமார்பன், சிவாஜி பொது நல பேரவை தர்மராஜ், சண்முகம் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE