சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நல்லூர், மங்களூர் ஒன்றியங்களை பிரிக்க கோரிக்கை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

வேப்பூர்; நல்லுார், மங்களூர் ஒன்றியத்தை மூன்று ஒன்றியங்களாக பிரிக்க கோரி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நல்லுார் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நல்லுார் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசு, பி.டி.ஓ.,க்கள் காமராஜ், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மேனேஜர் சுவாமிநாதன் வரவேற்றார். கவுன்சிலர்கள் பச்சமுத்து, மனோகரன், முத்து, முத்துகண்ணு, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றியங்களில் உள்ள 130 ஊராட்சிகளை, 3 ஒன்றியங்களாக பிரித்து, புதிதாக பெண்ணாடம் ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். பெண்ணாடம் அம்பிகா மற்றும் ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என கவுன்சிலர்கள் புலம்பினர். ஊராட்சி தலைவர்களிடம் பேசி, சரி செய்வதாக சேர்மன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X