சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழைய பொருட்கள் விற்பனை பொதுப்பணி துறை மீது புகார்

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்ன : பொதுப்பணித் துறை வசம் உள்ள, பழைய பொருட்கள், குறைந்த விலையில், ஏலத்தில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுதும், பொதுப்பணித் துறை பராமரிப்பில், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்கள் உள்ளன. ரூ.2 கோடிஇவற்றில், ஆங்கிலேயர் காலத்தில், கப்பலில் எடுத்து வரப்பட்ட இரும்பு தளவாடங்கள் மற்றும் தேக்கு உள்ளிட்ட, விலை உயர்ந்த மரங்களால் ஆன பொருட்கள் உள்ளன. புதிய கட்டடங்கள் கட்டுதல் மற்றும் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற கட்டடங்கள், பொதுப்பணித் துறையால் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக இடிக்கப்படுகின்றன. கட்டடங்களை இடித்து, அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொள்ள, ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில், சென்னை, தங்கசாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய இரும்பு தளவாட பொருட்கள், 2 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தற்போது, ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பழைய விடுதி கட்டடத்தில் இரும்பு மற்றும் தேக்கு மரத்திலான, பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு உள்ளன. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பொருட்களை அகற் றும் பணியில் இறங்கியுள்ளது. குறைந்த விலைக்கு ரகசியமாக ஏலம் விட்டதாக கூறி, மற்ற ஒப்பந்ததாரர்கள் பிரச்னையை கிளப்பியுள்ளனர்.

இதனால், டெண்டர் எடுத்தவர், பிரச்னை செய்வோரை அழைத்து பேசிய அதிகாரிகள், 'நீங்களாக பேசி முடிவுக்கு வாருங்கள்; இல்லாவிட்டால் மறு டெண்டர் விடும் நிலை வரும்' என, எச்சரித்துள்ளனர்.குறைந்த விலைக்கு பொருட்களை ஏலம் விட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இருக்கும் அதிகாரிகளோ, ஓய்வு அதிகாரிகள் மீது பழி போட்டு, தப்ப முயன்று வருகின்றனர்.நடவடிக்கைஇதேபோன்று, மேலும் பல கட்டடங்களையும், குறைந்த ஏலத்தில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுப்பணித் துறைக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. வரும் காலங்களில், இதுபோன்ற ஏலங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., தனிக் கவனம் செலுத்த வேண்டும்; அரசுக்கு உரிய வருவாய் கிடைக்க, வழிவகை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202014:15:08 IST Report Abuse
Bhaskaran தனியார் நிறுவனங்களிலேயே இம்மாதிரி நடந்துள்ளது நான் பணிபுரிந்த நிறுவனத்தில் காயலான் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை முப்பதாயிரத்துக்கு வாங்கி லஞ்சம் மட்டும் ஒருலட்சம் கொடுத்து எடுத்துகொண்டு போனதாக என் நண்பன் சொன்னார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X